சேலம் மாவட்டத்தில் 57 பேருக்கு கோரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 8 பேரும், கொளத்தூர்-1, நங்கவள்ளி-3, வீரபாண்டி-1, ஆத்தூர்-1, வாழப்பாடி-2, மேட்டூர் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சேர்ந்த 17பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களை சேர்ந்த (தருமபுரி-6, நாமக்கல் -7, ஈரோடு-4, திருச்சி-5, கள்ளக்குறிச்சி-4, சென்னை-5, கோவை-5, கிருஷ்ணகிரி-4) என 40 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; இதுவரை 99,950 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 97,681 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்; 584 பேர் சிகிச்சையில் உள்ளனர்; இதுவரை மொத்தம் 1,685 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *