தென்னிந்திய நடிகர் சங்கம் சேலம் மாவட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளை கலைமாமணி இராசி. சரவணன் அவர்கள் வேட்டி,சேலை, இனிப்பு,காரம் ஆகிய பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக மறைந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் கலந்துகொண்டு பொருட்களை பெற்றுக் கொண்டனர், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நியமனம் செயற்குழு உறுப்பினர் திரு.கலில் அவர்கள் வரவேற்றார், சிறப்பு விருந்தினர்களாக தமிழன் ஆர்.பார்த்திபன், KPN மகேஸ்வர் திரைப்பட நடிகர், மேட்டூர் நடிகர் சங்கத்தலைவர் பில்லா முருகன், மற் றும் கிரிசரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,இந்த நிகழ்ச்சியை கலிலுல்லா,ரகுபதி மனோகர், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
+ There are no comments
Add yours