`நள்ளிரவில் அழைப்பு!’- ரசிகரை மகிழ்ச்சிப்படுத்திய நடிகர் ஷாருக் கான் |Actor Shah Rukh Khan made fans happy by calling him to his hotel in the middle of the night

Estimated read time 1 min read

`பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் தனது ரசிகர் ஒருவரை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அதிகாலை இரண்டு மணிக்கு அழைத்துப் பேசி ஆச்சரியம் கொடுத்துள்ளார். ஜடின் குப்தா என்ற அந்த ரசிகர் ஷாருக்கானை சந்தித்து பேசவேண்டும் என்று நீண்ட நாள் ஆசையாக இருந்தார். அவர் ஷாருக்கான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து ஷாருக்கானுக்குத் தெரிய வந்தது. உடனே அந்த ரசிகரையும் அவரது நண்பர்கள் சிலரையும் தான் தங்கியிருந்த டெல்லி ஹோட்டலுக்கு வரும்படி கூறினார். உடனே ஜடின் தனது நண்பர்களுடன் சென்று அதிகாலை 2 மணிக்கு ஷாருக்கானை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக புகைப்படங்களை ஜடின் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு ஷாருக்கானை சந்தித்த அனுபவத்தையும் அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். எங்களுக்காக அதிகாலை 2 மணிக்கு நேரம் ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி. உங்களைப்போல் வேறு எந்த சூப்பர் ஸ்டாரும் ரசிகரை ஹோட்டலுக்குள் அழைத்து மரியாதை கொடுத்து  முழுநேரத்தையும்  செலவிடமாட்டார்கள்.  உங்களது ஆசிர்வாதத்திற்கு மிக்க நன்றி.

நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்ததற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற ஷாருக்கான் பொதுமக்களுடன் சேர்ந்து கலந்துரையாடினார். இதற்கிடையே உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார். ஷாருக்கானுக்கு 770 மில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நடிகர் ஜாக்கிசானுக்கு 520 மில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. நடிகர் ஜெர்ரி சைன்பில்டு ஒரு பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகர் என்ற பெயருடன் விளங்குகிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours