எடப்பாடி:
எடப்பாடி வெள்ளரிவெள்ளி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மோதி இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி கிராமம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் எடப்பாடியிலிருந்து வெள்ளரிவெள்ளி சென்ற டிராக்டரும், அதனை பின் தொடர்ந்து வந்த ஸ்கூட்டியும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்புவதற்காக வந்தபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி டிராக்டரின் பெரிய சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதில் ஸ்கூட்டி ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மனைவி சந்திரகலா (40) மற்றும் உடன் வந்த ராஜா மகள் சவிதா (21) ஆகிய இருவருக்கும் படு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக சந்திரகலாவை சேலம் (காவேரி) தனியார் மருத்துவமனைக்கும், சவிதாவை கோவையிலுள்ள கங்கா (தனியார்) மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்துகுறித்து பூலாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.