இந்தியா:
உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார்.
இந்தியாவின் இளம் செஸ் ஜாம்பவனாக பிரக்ஞானந்தா திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் பங்கேற்று ஆடி வந்தார். கொரோனா காரணமாக இந்த போட்டித்தொடர் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் தலைசிறந்த கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தா அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஸ் கிரியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், இரண்டு சுற்றாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான செஸ் ஜாம்பவானாகிய சீனாவைச் சேர்ந்த டிங் லிரேனுடன் மோதினர். இதில் டை பிரேக்கரில் டிங் லிரேன், பிரக்ஞானந்தாவை வீழ்த்தியதால் அவர் செசபிள் மாஸ்டர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிங் லிரேனுடன் தோல்வியை சந்தித்தாலும், அவருக்கு கடுமையான நெருக்கடி அளித்த பிரக்ஞானந்தாவிற்கு செஸ் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours