கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்…!

Estimated read time 1 min read

சீனா:

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் சென்ற ஊழியர்கள் அவரைப் பரிசோதித்தபோது முதியவரின் இதயத் துடிப்பு ஓடிக்கொண்டு இருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சீன சுகாதாரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சிய சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

மார்ச் 1 முதல் ஷாங்காய் இல் லாக்டவுன்

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, சுமார் 25 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸின் புதிய தொற்று தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதனால், மார்ச் 1ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக, மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். சமூக வலைதளங்களில் பதிவிட்டு அரசுக்கு எதிராக மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை, ஷாங்காயில் 7333 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், நிர்வாகம் மக்களைக் ககடுமையாகக் கட்டுப்படுத்துகிறது, இதனால் நகர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours