ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மேரி சோனியா (27). எம்.பி. ஏ. பட்டதாரியான அவரது செல்போன் எண்ணுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் இணையதள லிங்க் ஒன்று வந்தது. அந்த லிங்கில் நுழைந்து பதிவு செய்திட ரூ.100 கட்டணம் செலுத்தினார்.
இதையடுத்து மேரி சோனியா அந்த இணையதளத்தில் ரூ.300 முதலீடு செய்தார். இதற்காக அவருக்கு ரூ.320 கிடைத்தது. இதனால் அவர் தொடர்ந்து ரூ. 2 லட்சத்து 54 ஆயிரத்து 750 வரை முதலீடு செய்தார். ஆனால் அந்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. பின்னர் தான் போலி இணையதளம் மூலம் பணத்தை அவர் இழந்தது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து மேரி சோனியா மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours