கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு: தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?! | PM SHRI: The bjp govt stopped the school education fund to tamil nadu: what’s the problem?

Estimated read time 1 min read

முதலில், சமக்ர சிக்ஷா என்பது தனித்திட்டம், அதேபோல பிஎம் ஸ்ரீ என்பதும் தனித்திட்டம். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இரண்டுக்கும் தனித்தனியாகத்தான் நிதி ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, சமக்ர சிக்ஷாவுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைப்பதும், பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறைவேற்றினால்தான் நிதியை விடுவிப்போம் என்று சொல்வதையும் எப்படி ஏற்கமுடியும்? என்று கேட்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் அவரும், `பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் நிதி தரமுடியும். இல்லையெனில் கொடுக்கமுடியாது. நீங்கள் உங்கள் அரசுடன் பேசி ஒரு முடிவெடுத்துவிட்டு வாருங்கள்’ என வெளிப்படையாகவேகூறி அனுப்பிவிட்டார். மத்திய அரசின் நிதியை நம்பி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவிட்டோம். ஆசிரியர்களுக்கான சம்பளமும் கொடுக்கவேண்டும். நாம் கையெழுத்திடாமல் இருந்தால் நமக்கு வரக்கூடிய நிதியை முற்றிலும் நிறுத்திவிடுவார்கள். இதனால் கல்வித்திட்டங்கள் முடங்கிப்போகும்!” என்றனர்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

`தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்!’

இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடுமுழுவதும் சென்றடைவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி எதிர்காலத்துக்கு அரசியல் கொள்கைகள் தடையாக இருக்கக்கூடாது. ஆக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.

மாணவர்களின் கல்வி விஷயத்தில் குழப்பம் நீடிப்பது நல்லது அல்ல. மத்திய அரசு நிபந்தனை விதிப்பதும் ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில், அரசியலை கடந்து மாணவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிக்கல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே கல்வியாளர்களின் ஒருமித்த கருத்து.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours