எதிர்ப்புக் கோஷத்துடன் வெளிநடப்பு செய்த சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க கவுன்சிலர்கள்:
மாமன்றக் கூட்டத்தின் இறுதியாக சுமார் 50-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற மேயர் பிரியா முன்வந்தார். அப்போது, `சென்னை பள்ளியை வட்டாசியர் அலுவகமாக மாற்றம் படும் (பொருள் எண்: 30) தீர்மானத்துக்கு வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, “அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும் பள்ளிக்கூடம் பழையபடி பள்ளிக்கூடமாகவே இயங்கும்” என்று மேயர் பிரியா பதிலளித்தார். தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மைத் துறையில் உள்ள தூய்மைப் பணிகள், குப்பைகள் தரம்பிரித்தல், வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்குவிடும் தீர்மானங்களை (பொருள் எண்: 37, 38,39) நிறைவேற்றக்கூடாது எனக் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தனர். இதை ஏற்காத மேயர் பிரியா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `தீர்மானத்தை எதிர்க்கிறோம்’ என்று அவையில் கோஷமிட்டபடியே தி.மு.க கூட்டணிக் கட்சிகளான வி.சி.க, சி.பி.ஐ., சி.பி.எம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கலைஞர், ஸ்டாலின், தி.மு.கவைப் பாராட்டிய பா.ஜ.க கவுன்சிலர்:
முன்னதாக பா.ஜ.க கவுன்சிலரான உமா ஆனந்த், “கலைஞர் கருணாநிதியின் பெருமையை நாங்கள் போற்றுகிறோம். தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தலைவருக்கு நூற்றாண்டு நாணயம் வெளியிட்டத்தில் நாங்கள் பெருமையாகவும், அவருக்கு செய்யும் மரியாதையாகவும் நினைக்கிறோம்! அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் சாலைப் பணிகள் போன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்திவருகிறார். குறைகளை சுட்டிக்காட்டுவதைப்போல நிறைகளையும் நாங்கள் பாராட்டுவோம்” என்று புகழாரம் சூட்டினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக 23 ஆண்டுகளாக வீடுகேட்டுப் போராடிவரும் கண்ணப்பர் திடல் மக்களுக்காக மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு வழங்குவதற்கு, மக்கள் அரசுக்கு கட்டவேண்டிய பயனாளிகள் பங்களிப்புக் தொகை ரூ.4,27,000 ரூபாயில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை சென்னை மாநகராட்சியே வழங்கும் என மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கண்ணப்பர் திடல் மக்கள் பிரச்னை தொடர்பாக, 1.09.2024 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ” என்ற தலைப்பில் கள ஆய்வுக் கட்டுரை எழுதியிருந்தோம். அதில், “கண்ணப்பர் திடல் மக்களின் நியாயமான கோரிக்கை சட்டப்படி நிறைவேற்றப்படும்” என மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
+ There are no comments
Add yours