தொழுகை இடைவேளையை ரத்து செய்ததை “வரலாற்று சிறப்புமிக்க முடிவு’ எனப் பெருமைகொள்ளும் அஸ்ஸாம் முதல்வர், இதற்கு உறுதுணையாக இருந்ததற்காக சபாநாயகர் பிஸ்வஜித் டைமேரி மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமன்றம் எந்தவித மதரீதியான சலுகைகளும் இல்லாமல் இயங்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அஸ்ஸாம் சட்டமன்றத்தில் நேற்று, `அஸ்ஸாம் ரத்து மசோதா, 2024′ நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அஸ்ஸாம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம், 1935-ஐ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours