கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம்நேற்று முன்தினம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது மத்திய தடயவியல் குழு, சிபிஐ குழுவை சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 3 மணி நேரம் சஞ்சய் ராயிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
கடந்த 8-ம் தேதி இரவு நானும் எனது நண்பரும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினோம். அன்றிரவு இருவரும் சேர்ந்து இரு சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு சென்றோம். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்தோம். பின்னர் எனது காதலியுடன் செல்போனில் பேசினேன். ஆடையின்றி இருக்கும் புகைப்படங்களை அனுப்புமாறு அவரிடம் கேட்டேன்.
கடந்த 9-ம் தேதி அதிகாலை 4.03 மணிக்கு ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்துக்கு சென்றேன். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன். பின்னர் கொல்கத்தா காவலர் குடியிருப்பில் உள்ள நண்பர் அனுபம் தத்தாவின் வீட்டுக்குச் சென்றேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொல்கத்தா பிரசிடென்சி சிறைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 25-ம் தேதி சிறையில்சஞ்சய்ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தூங்க அனுமதிக்குமாறு சிறைத் துறை அதிகாரிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவர்ஓய்வெடுக்க அனுமதி வழங் கினோம்.
இதே சிறையில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ஜோதிபிரியா மாலிக் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அருகில் உள்ள அறையில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இவ்வாறு சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வீடியோ வெளியீடு: கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது கொல்கத்தா போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையின் அப்போதைய தலைவர் சந்தீப் கோஸின் வழக்கறிஞர் சாந்தனு, நெருங்கிய ஆதரவாளர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கருத்தரங்கு கூடத்தில் குவிந்துள்ளனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
பெண் மருத்துவர் சடலம்இருந்த கருத்தரங்கு கூடத்தில் சந்தீப் கோஸ், அவரது வழக்கறிஞர் சாந்தனு உள்ளிட்டோர் குழுமியிருந்த வீடியோ நேற்று வெளியானது. இதன்மூலம் கொலை நடந்த இடத்தில் தடயங் களை அழிக்க முயற்சிகள் நடை பெற்றன என்ற குற்றச்சாட்டு உறுதியாகி உள்ளது.