சமீபத்தில் வைரமுத்து இசையை விடப் பாடல் வரிகள்தான் பெரிது என்று பேசியது “இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா’ என்ற சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இது பற்றிப் பேசியது சமூகவலைதளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கிடையில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ‘கூலி’ படத்தின் டைட்டில் ரிவீலிங் வீடியோவில், இளையராஜாவின் ‘வா… வா… பக்கம் வா…’ பாடல் இடம்பெற்றிருந்ததற்குக் காப்புரிமை கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதாக கோலிவுட்டில் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து இளையராஜா தன் பாடலுக்குக் காப்புரிமை கேட்பது சரியா, தவறா என்றெல்லாம் பலரும் பேச, அது கோலிவுட்டில் விவாதப்பொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றைத் தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில், “என்னைப் பற்றிய வீடியோக்கள், செய்திகள் தினமும் வருவதை நண்பர்கள் மூலம் தெரிந்துகொள்கிறேன். இவற்றில் எல்லாம் நான் கவனம் செலுத்த மாட்டேன்.
+ There are no comments
Add yours