ஓர்ஹான் அவத்ரமணி என்கிற ஓர்ரி என்பவர் மில்லியன் ஃபாலோயர்ஸ்களுடன் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸராக வலம் வருபவர். பாடகர், ஸ்டைலிஸ்ட், ஃபேஷன் டிசைனர் என பல்வேறு துறைகளில் பிரபலமானவர்.
வெளிநாட்டுச் சுற்றுலா, பார்ட்டி, விதவிதமான காஸ்ட்யூம்கள், விலை உயர்ந்த அணிகலன்களுடன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது போட்டோக்களைப் பதிவிட்டு திடீர் இன்ஸ்டாகிராம் பிரபலமானவர் ஓர்ரி. இவர் சமீப நாள்களாக தீபகா படுகோன், ஜான்வி கபூர், நீடா அம்பானி, சல்மான் கான் என பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலருடன் செல்ஃபி எடுத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/c5c0b870-4e84-421b-83a2-a141e17fc616/New_Project__4_.jpg)
இது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக, ஓர்ரி, ஒரு செல்ஃபி எடுக்க 25 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிப்பதாக செய்திகள் பரவின. அதுமட்டுமின்றி,பாடகர், ஸ்டைலிஸ்ட், ஃபேஷன் டிசைனர் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் ஓர்ரி, நிகழ்ச்சிகளில் பங்கேற்க லட்சங்களில் வசூலிப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இதுதவிர, உணவைப் பார்த்துக் கொள்ள மேனேஜர், ஆடைகளை பராமரிக்க மேனேஜர், டேட்களைப் பார்த்துக் கொள்ள மேனேஜர், பயணங்கள், கணக்கு வழக்குகளைப் பார்த்து கொள்ள மேனேஜர் என ஐந்து மேனஜரை வைத்துள்ளார் போன்ற ஏராளமான தகவல்கள் பாலிவுட் வட்டாரத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் வைரலாகி பலரை ஆச்சரியப்பட வைத்தது.
இது நெட்டிசன்களிடையே பேசுபொருளாக யார் இந்த திடீர் பிரபலம் ஓர்ரி? இவருக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்க கமெண்ட்களில் தீயாய் பரவி வந்தன.
இந்நிலையில் தன்னைப் பற்றிய இந்த ஆச்சர்ய தகவல்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஓர்ரி, “எனக்கு வருமனம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார்கள். அதுவும் ஒரு செல்ஃபிக்கு ரூ.25 லட்சம் வரை வாங்குவதாக குமுறுகிறார்கள். ஆமாம், என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள 25 லட்சம் ரூபாய் வாங்குகிறேன். நானாக அவர்களுடன் போட்டோ எடுக்க விரும்பினால் பணம் வாங்குவதில்லை. அவர்களாக ஆசைப்பட்டால் நிச்சயம் அதற்குக் கட்டணம் வசூலிப்பேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/651b3279-c8a4-4ccd-94af-37e86c16758e/Snapinsta_app_431239771_922889679454835_9060738454802939014_n_1080.jpg)
நான் ஒரு பாடகர், ஃபேஷன் டிசைனர். ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் ரூ.25-30 லட்சம் வரை எனக்குக் கொடுத்தத் தயாராக இருக்கிறார்கள். நிகழ்ச்சிகளில் பாடுகிறேன், உரையாடுகிறேன், அனைவருடனும் சலிக்காமல் செல்ஃபி எடுக்கிறேன். இதற்கெல்லாம் சேர்த்துதான் ரூ. 25 -30 லட்சம் வாங்குகிறேன். நிறையபேர் என்னை வலுக்கட்டாயமாக அதிகப் பணம் கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள். பாலிவுட்டில் எனக்கு நண்பர்கள் அதிகம். இன்ஸ்டாகிராமில் நான் பிரபலமாவதற்கு முன்பே கிடைத்த நண்பர்கள் அவர்கள். அதனால்தான் நிறைய பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுகிறேன்.” என்று கூறியிருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பது குறித்துப் பேசியவர், “திரைப்படங்களில் நடிப்பத்தை நான் விரும்பவில்லை. கடினமாக உழைத்து வேலை செய்வது எனக்குப் பிடிக்காது. ஒரு நாள் முழுவதும் வேலை செய்து, வேலையை மையமாகக் கொண்டே வாழ்வது எனக்குப் பிடிக்காது. எனக்கென்று பல கனவுகள் இருக்கின்றன. அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். அதில் கிடக்கும் வருமானமே எனக்குப் போதுமானது” என்று கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours