அங்குள்ள மாரியம்மன் கோயில் ஒன்றில் சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியதாகத் தெரிகிறது. படத்தின் பெயர் “மிஸ்டர் & மிஸஸ்’. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள படத்துடன் தொடர்புடைய சிலரிடம் பேசினோம்.
“வனிதா – ராபர்ட் காம்பினேஷன்ங்கிறது ஆரம்பத்துல ரியலா இருந்த ஒண்ணு. இருவரும் சேர்ந்து வாழ்ந்தது, வனிதா பெயரை ராபர்ட் டாட்டு குத்தியிருந்தது, ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சது எல்லாமே கோலிவுட்ல எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.
பிறகு ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் போனப்ப, அந்த வாய்ப்பை வாங்கித் தந்ததே வனிதாதான்னு அவரே சொன்னார். மீடியாவைப் பொறுத்தவரை வனிதான்னாலே ‘வைரல் நியூஸ்’ தான்ங்கிற போது, வனிதா – ராபர்ட் மாஸ்டர் காம்பினேஷன்னா ட்ரெண்டு ஆகாதா? இந்த ஐடியாவைச் சொல்லி ஒரு கதை ஓகே ஆக ரெண்டு பேரும் ஜம்னு ஷூட்டிங் கிளம்பிட்டாங்க” என்கிறார்கள் அவர்கள்.
+ There are no comments
Add yours