சேலம்:

வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையோர கடை நடத்துபவர்கள் இடம் யாரேனும் மிரட்டி பணம் பறித்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல்துறை சார்பில்
சூரமங்கலம் பகுதியில் மாநகர காவல் ஆணையாளர்
நஞ்முல் ஹோதா தலைமையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் ஜங்சன் பகுதியில் இருந்து சூரமங்கலம் சோனா கல்லூரி ஏ.வி.ஆர்.ரவுண்டானா
5 ரோடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நடந்தே சென்று முக கவசம் அணியாத நபர்களுக்கு முகக்கவசம் வழங்கியும், சாலையோரம் உள்ள ஆதரவற்றோருக்கு முக கவசம் மற்றும் பண உதவி வழங்கினார்.

அதனை தொடர்ந்து சாலையோரம் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவன பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் ரவுடிகள் மற்றும் குண்டர்களின் அச்சுறுத்தல் ஏதேனும் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.யாரேனும் உங்களிடம் பணம் பறிக்க மிரட்டும் பட்சத்தில் உடனடியாக காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நடை பயண விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் உதவி ஆணையர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என காவல்துறையினர் பலரும் பங்கேற்றனர்.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *