GOAT Movie First Single Promo Whistle Podu Lyrical Video Release Sung By Thalapathy Vijay Directed By Venkat Prabhu

Estimated read time 1 min read

Whistle Podu Lyrical Video : விஜய் பாடியிருக்கும் ‘விசில் போடு’ பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ குறித்து நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். 

விசில் போடு:

GOAT படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார். இப்பாடலிற்கு விசில் பாேடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

யுவன் சம்பவமா? யுவனுக்கு சம்பவமா?

விசில் போடு பாடல் வெளியாவதற்கு முன்னர் ரசிகர்கள் பலர் “நாளை யுவனின் சம்பவமா, யுவனுக்கு சம்பவமா..” என கேட்டு வந்தனர். தற்போது இப்பாடல் வெளியாகியுள்ள நிலையில், ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பலர் தளபதியின் முதல் சிங்கிளிற்கு அனிருத்தான் சரியானவர் என கூறி வருகின்றனர். 

அரசியல் வரிகள்:

எப்போதும் போல, இந்த பாடலிலும் விஜய்க்காக அரசியல் கலந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. “Champagne ஆ-campaign-ஆ” என்ற வரி அரசியல் வாசனை அடிப்பதாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மைக்கை எடுக்கவா என்று கூட விஜய் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘விசில் பாேடு’ என பெயர் வைக்க காரணம் என்ன? 

இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு, மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதும், குறிப்பாக ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த வருடத்திற்கான ஐபிஎல் சீசன் தொடங்கியிருப்பதை தொடர்ந்து, இன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெறுகிறது. இதனால், சென்னை அணிக்கு ஆரவாரம் செய்யும் வகையில், இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த படம் ‘பென்ஸ்’-ஹீரோ யார் தெரியுமா?

GOAT திரைப்படம்:

வெங்கட் பிரபுவுட் நடிகர் விஜய், முதன் முதலாக கைக்கோர்த்துள்ள படம், GOAT (The Greatest Of All Time). இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, விஜய்யுடன் இன்னும் பல நடிகர்கள் நடித்ததிருக்கின்றனர். சினேகா, லைலா உள்ளிட்ட நடிகைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க உள்ளனர். அவர்கள் மட்டுமன்றி, தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் மீனாட்சி செளத்ரியும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். 

தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்ற பெயரெடுத்த வெங்கட் பிரபு, ஏற்கனவே நடிகர் அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கினார். இதையடுத்து, விஜய்யை வைத்தும் அதே போன்ற ஒரு ஜாலியான திரைக்கதையுடன் படத்தை இயக்குகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு வேடங்களில் நடிக்கும் விஜய்..

நடிகர் விஜய், GOAT படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டரிலேயே இவருக்கு 2 வேடங்கள் என்பது தெரிய வந்து விட்டது.  இதில், அவர் அப்பா-மகன் என இரு பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. நடிகர்கள் பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா உள்ளிட்டோர் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

வில்லன் யார்? 

நடிகர் விஜய்தான், GOAT படத்தில் வில்லனாகவும் ஹீராேவாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர், நடிகர் கமல்ஹாசனும் ஹீரோ-வில்லன் என இரு பாத்திரங்களில் இந்தியன் படத்தில் நடித்திருக்கிறார். அஜித்தும் ஹீரோயிக் வில்லன் ரோலில் மங்காத்தாவில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யும் சேர இருக்கிறார். 

மேலும் படிக்க | Salman Khan : சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு! கொலை முயற்சியா? நடிகருக்கு என்ன ஆனது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours