சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு 10 கோடி சம்பளம்
10 ஏப், 2024 – 14:49 IST
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரும், சீதையாக நடிக்கும் சாய்பல்லவியும்தான் மூன்று பாகங்களிலும் வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் படத்திற்கு 300 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பாகத்திற்கும் சேர்த்து சாய் பல்லவிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சாய் பல்லவி ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இது மூன்று பாகம் என்பதால் இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.
+ There are no comments
Add yours