Ninaithen Vandhai Zee TV Serial April 10 Update | நினைத்தேன் வந்தாய் அப்டேட்: மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா?

Estimated read time 1 min read

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கரண்ட் கட் ஆனதால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க சுடர் பாட்டு பாடி எழிலை கலாய்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மனோகரியிடம் சிக்கும் சுருக்கு பை

அதாவது, எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரத்தில் மனோகரி சுடரின் பைலுக்குள் ஏதோ ஒன்று இருக்கு, அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று பிளான் போட்டு அவளது ரூமுக்குள் சென்று தேடுகிறாள். அந்த நேரத்தில் சுடர் பைலில் தாலி இருக்கும் சுருக்கு பை அவளது கையில் சிக்குகிறது. 

உடனே அந்த சுருக்கு பையை திறந்து பார்க்க முயலும் சமயத்தில் கரண்ட் வந்து விட மனோகரி வேகவேகமாக வெளியே வந்து விடுகிறாள், மறுபக்கம் பாட்டு பாடி கொண்டிருந்தவர்கள் கரண்ட் வந்து விட்டதால் அவரவர் ரூமுக்கு கிளம்பி செல்கின்றனர். அப்போது சுடர் மீண்டும் எழில் குடிபோதையில் பாடிய பாடலை பாட எழில் அவளை முறைக்க ரூமுக்கு வந்து விடுகிறாள். எழிலும் ரூமுக்கு சென்று நடந்ததை நினைத்து பார்த்து சிரிக்கிறான். 

மேலும் படிக்க | முன்னாள் மனைவிக்காக பாடல் பாடிய தனுஷ்-வெட்கப்பட்ட ஐஸ்வர்யா! வைரல் வீடியோ..

ஸ்கூலுக்கு ரெடியாகாத கவின் 

இதனையடுத்து மறுநாள் காலையில் குழந்தைகள் எல்லாரும் ஸ்கூலுக்கு கிளம்ப கவின் மட்டும் ரெடியாகாமல் இருக்கிறான். மனோகரி ஸ்கூல் போகலையா என்று கேட்க நீங்க சொன்னதால் ரேங்க் ஷீட்டில் அப்பா கையெழுத்தை நானே போட்டுட்டேன். இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங். அப்பா வந்தா நான் மாட்டிக்குவேன் என்று பயப்பட மனோகரி சரி அப்பாவோட சேர்ந்து நானும் வரேன் என்று சொல்கிறாள். கவின் எழில் கையெழுத்து போட்டதை பெரிய பிரச்சனையாக்கி குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட வேண்டும் என்று கணக்கு போடுகிறாள். 

அதற்கேற்றார் போல எழிலிடம் பேசி சம்மதிக்க வைத்து அவனை ஸ்கூலுக்கு அழைத்து கொண்டு கிளம்ப தடுத்து நிறுத்தும் கனகவல்லி சுடரை கூட்டிட்டு போங்க, குழந்தைகளோட கேர் டேக்கர் அவ தானே, குழந்தைகளை பற்றி அவளுக்கு தான் தெரியணும் என்று சொல்ல மூவரும் காரில் கிளம்புகின்றனர். காருக்குள் சுடரும் மனோகரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொள்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?

நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க இருந்த ‘அந்த’ நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours