தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் உள்ளது. தற்போது விஜய் நடித்து வரும் GOAT படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்திரி, பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது புதிய படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆனா பிரதீப் ரங்கநாதனை ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தது ஏஜிஎஸ்.
மேலும் படிக்க | இந்த 7 மலையாள கிரைம் த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!
மிகவும் கம்மி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க உள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த புதிய படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த படம் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிக்கும் 26வது படமாகும். இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், இணை கிரியேட்டிவ் தயாரிப்பாளராக ஐஷ்வர்யா கல்பாத்தியும் பங்காற்ற உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து இணையும் இந்த புதிய படத்தின் அறிவிப்பு வீடியோவுடன் வெளியாகி உள்ளது.
Dedicated to all those who have a dream 🙂
Joining hands with my brother , friend , well wisher @Dir_Ashwath and my home ground @Ags_production once again #AGS26 #PR03
Announcement video : https://t.co/JwLjs8n5HI#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh pic.twitter.com/hKxBbns9TB
— Pradeep Ranganathan (@pradeeponelife) April 10, 2024
நிஜ வாழ்க்கை நட்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ நகைச்சுவை ததும்பும் வகையில் உருவாகி உள்ளது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்று இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. படத்தை பற்றி பேசிய கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் ரங்கநாதனையும், ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஷ்வத் மாரிமுத்துவையும் இணைப்பதில் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மகிழ்ச்சி அடைகிறது. இந்த புதிய திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டையும் கட்டாயம் பெற்று ஏஜிஏஸ் நிறுவனத்தின் வெற்றிப்பட வரிசையில் இடம் பிடிக்கும்,” என்றார்.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கியுள்ள சம்பளம் விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours