2026 ஆம் ஆண்டில் கட்டாயம் அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் விஷால் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து வேலை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஷாலும் 2026 ஆம் ஆண்டில் கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என இப்போது அறிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு விகடன் தரப்பில் விஷாலுடன் பிரத்யேகமான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நடந்திருந்தது. அந்த நிகழ்வில் விஷால் முதல் முறையாக 2026 தேர்தலுக்காக கட்டாயம் அரசியலுக்கு வருகிறேன் எனத் தெரிவித்தார்.
தமிழ்ப் புத்தாண்டு நாளான இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஷால், “நான் 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியலுக்கு கட்டாயம் வந்துவிடுவோன். சாலை வசதி நன்றாக இருக்கிறது. விவசாயிகள் நலமாக இருக்கிறார்கள். மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இப்படி ஒரு சூழலில் விஷால் எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்கிற நிலை இருந்தால் நான் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்திருக்கமாட்டேன். ஆனால், அப்படியில்லையே. அதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்.
தனிக்கட்சியா அல்லது ஏற்கனவே இருக்கும் கட்சிகளில் இணைகிறேனா என்பதையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நான் விஜயகாந்த் மாதிரி இல்லை. ஒரு வேளை எனக்கும் கல்யாண மண்டபம் இருந்திருந்தால் அதையும் இடித்து தள்ளியிருப்பார்கள்.
லயோலா கல்லூரியில் படித்த உதயநிதி, விஜய், விஷால் என மூவரும் 2026 தேர்தலில் போட்டியிடுவீர்களே என கேட்கிறீர்கள். லயோலா கல்லூரியில் படித்தவர்கள் சினிமாவில்தான் அதிகம் இருப்பார்கள். இப்போது அரசியலுக்கும் வருகிறோம். இப்போது திரைப்படங்களை பார்க்க மக்களுக்கு நிறைய ஆப்சன் இருக்கிறது. வேண்டுகின்ற மொழியில் வேண்டுகின்ற படத்தை தேடி பார்த்துக் கொள்கிறார்கள். அதேமாதிரி, 2026 தேர்தலிலும் மக்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கும்.’ என கூறியிருந்தார்.
நடிகர் விஷாலின் இந்த முடிவு குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் தெரிவியுங்கள்!
+ There are no comments
Add yours