Oscar Awards Controversies From Will Smith Slap To John Cena Nude On Stage Check More Details In Tamil

Estimated read time 1 min read

Oscar Awards Controversies Details In Tamil : உலக சினிமாவில் ஓராண்டில் வெளியான சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அதற்கு ஆஸ்கர் விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், 2024 வருடத்திற்கான ஆஸ்கர் நிகழ்ச்சி, லாஜ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைப்பெற்றது. இதில் ஓப்பன்ஹைமர் படம், 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘பார்பி’ படம், ஒரே ஒரு விருதினை மட்டுமே வாங்கியுள்ளது. 

ஆஸ்கர் சர்ச்சைகள்:

ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகள், உலக சினிமாவின் பெரிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதில், உலகளவில் பிரபலமான பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், கொடுக்கப்படும் விருதுகளுக்கு பஞ்சம் வருகிறதோ இல்லையோ, சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவர், ஒரு பஞ்சயாத்தை இழுத்து கொண்டு வந்து விட்டுவிடுவர். அந்த சர்ச்சை, அடுத்த வருட ஆஸ்கர் விருது நிகழ்ச்சி வரும் வரை மக்களுக்கு மறக்காது. இந்த நோக்கத்தோடுதான் இது போன்ற சர்ச்சைகள் வேண்டுமென்றே கிளப்பி விடப்படுகிறதா, அல்லது அவை எதார்த்தமாக நடக்கின்றனவா என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆஸ்கர், இதுவரை சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன என்பதை பார்ப்பாேம். 

ஆடையின்றி வந்து நின்ற ஜான் சீனா:

“I Am John Cena You Can’t See Me” என்ற வாசகம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர், ஜான் சீனா. குத்துச்சண்டை வீரரான இவர், தற்போது அமெரிக்காவில் நடிகராகவும் உள்ளார். இவர், இந்த வருடத்தின் ஆஸ்கர் நிகழ்ச்சிக்கு சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதினை வழங்க வந்தார். அப்போது ஒரே ஒரு பலகையை வைத்து தனது பிறப்புறுப்பை மறைத்தபடி வந்து, “ஆடை அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமானது” என்றார். அதன் பிறகு இரண்டு நிமிடங்களுக்கு லைட்ஸ் ஆஃப் ஆக, உடனே அவருக்கு 2 பேர் வந்து உடையை மாட்டி விட்டனர். இந்த சம்பவம், தற்போது உலகளவில் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Oscar 2024 List : ஆஸ்கர் விருதுகளின் வெற்றியாளர்கள் யார்? எந்த படத்திற்கு என்ன விருது கிடைத்தது? முழு லிஸ்ட்..

தொகுப்பாளரை அறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்.. 

ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள், விளையாட்டாக ஏதேனும் ஜாேக் செய்வதுண்டு. இவை சமயங்களில் எல்லை மீறி செல்லலாம். அப்படி சென்ற ஒரு ஜோக், கடந்த ஆண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய க்ரிஸ் ராக்கிற்கு வில் ஸ்மித், பளார் என்று அறைந்தார். வில் ஸ்மித்தின் மனைவி குறித்து க்ரிஸ் ராக் ஜோக் அடித்ததால் நேர்ந்த விபரீதம் இது. அதன் பிறகு அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் க்ரிஸிடம் மன்னிப்பு கேட்டு, வீடியோ பதிவுகளை வெளியிட்டார். 

தம்பிக்கு முத்தம் கொடுத்த ஏஞ்சலீனா ஜோலி:

அமெரிக்காவின் மிகப்பெரிய நடிகையான ஏஞ்சலீனா ஜோலி, 2000ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். விருதை பெற்ற பிறகு அவர் பேசிய போது, தனது அண்ணன் மீது இருந்த பாசத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு, தனது சகோதரரை உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டார். இது அப்போது பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது. 

ஆடையின்றி சுற்றித்திரிந்த நபர்..

50 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஒரு நபர் ஆடையின்றி கேமரா முன் நின்று இரண்டு விரல்களை காண்பித்து “Peace” என்பது போல காண்பித்தார். இந்த போட்டோ, அப்போதே பெரிதாக பேசப்பட்டது. 

மேலும் படிக்க | வருங்கால கணவரை கலாய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி! என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours