அடுத்தடுத்து இறந்த அக்கா, தங்கை நடிகைகள்
09 மார், 2024 – 10:33 IST
ஹிந்தி வெப் தொடர்களில் நடித்து வந்தவர்கள் டோலி சோஹி மற்றும் அவரது சகோதரி அமந்தீப் சோஹி. இருவரும் பல தொடர்களில் நடித்துள்ளனர். கலாஷ் மற்றும் பாபி படங்களில் ஹீரோயினாக டோலி சோஹி நடித்துள்ளார். ‘ஜான்சி கி ராணி’ தொடரில் ஜான்சி ராணியாக நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு ஏராளமான தொடர்களில் நடித்தார். 48 வயதான டோலி, கர்ப்ப பை புற்று நோயால் பல ஆண்டுகள் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
டோலி சோஹியின் தங்கை அமன்தீப் சோஹி. ‘பட்டமீஸ் தில்’ என்ற படத்தில் அறிமுகமான இவர் ‘ஜனக்’ தொடர் மூலம் புகழ்பெற்றார். ஏராளமான தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அமன்தீப் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் தான் அவர் இறந்தார். அதற்கு அடுத்த நாளிலேயே டோலி சோஹி மறைந்தார்.
அடுத்தடுத்த நாளில் அக்கா, தங்கை நடிகைகள் மரணம் அடைந்தது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours