அதே மாதிரி மிக்ஜாம் புயல் வந்தப்ப எங்க வீடு முழுக்க தண்ணீர் வந்து மாடியில் தான் இருந்தோம். அப்ப வீடியோ எடுத்துட்டேன் ஆனா அதை அப்லோடு பண்றதுக்கு எனக்கு நெட் கனெக்ஷன் இல்ல. எப்பவும் காலையில் வீடியோ பதிவு பண்ணிடுவேன் ஆனா அன்னைக்கு சாயங்காலம் தான் பதிவிட முடிஞ்சது. அதுவே டைமிங் மிஸ் ஆகிடுச்சேன்னு ரொம்ப மன வருத்தத்தை கொடுத்துச்சு!’ என்றவர் தொடர்ந்து பேசினார்.
`விவேக் சார் உட்பட பல பிரபலங்கள் என்னுடைய இந்த முயற்சிக்காக என்னை பாராட்டியிருக்காங்க. அதெல்லாம் தான் இன்னமும் தமிழ் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து பண்ணனுங்கிற எண்ணத்தை உருவாக்குது. உரைஞரும், கவிஞருமான மூவேந்திர பாண்டியன் என்பவர் தமிழ் சார்ந்து நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்கார். அவர் எனக்கு `திருக்குறள் திருச்செல்வி’ என்கிற பட்டம் வழங்கி என்னை கெளரவித்திருக்கிறார்!’ என்றதும் அடுத்தகட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.
`எனக்கு நாலடியாரும் தெரியும். ஆனா, நான் புத்தகங்கள் வாங்கியெல்லாம் நாலடியார் படிக்கல. அதனால நாலடியாரையும் மக்களுக்கு எளிய முறையில் சொல்லணும்னு அதுக்கான நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன். அதனால இப்ப பத்து நாட்கள் அதுக்காக பிரேக் எடுத்திருக்கேன். அதன் பிறகு நாலடியாரையும் தொடர்ந்து பதிவிடுவேன்!’ என்றார்.
+ There are no comments
Add yours