தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி தனக்கு கம்பெனியில் 25% ஷேர் இருப்பதாக சொல்லி ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதிர்ச்சி கொடுக்கும் நான்சி
அதாவது, சுபாஷ் மற்றும் துரை ஆகியோர் வீட்டிற்கு வந்து நான்ஸி தனக்கு ஷேர் இருப்பதாக சொல்லி ஷாக் கொடுத்ததை சொல்ல அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஆபிசுக்கு சென்று நான்ஸியிடம் பேச அவள் மீண்டும் தனக்கு ஷேர் இருக்கு என்னால் போக முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
இதனை தொடர்ந்து சேது ஆடிட்டரை அழைத்து பேச அவர் ஆமாம் நான்ஸிக்கு ஷேர் இருக்கு, எதுவும் செய்ய முடியாது. வேணும்னா செட்டில்மென்ட் பேசி பாருங்க என்று சொல்கிறாள், இதனையடுத்து நான்ஸியிடம் வந்து செட்டில்மென்ட் பேச அவள் பணம் எதுவும் தேவையில்லை என்று சொல்கிறாள்.
மேலும் படிக்க | படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருந்தவர்-அட இந்த நாயகியா?
அர்ச்சனாவை மிரட்டும் நான்சி
ஆனால் சீதா மகாவை கொன்ற குற்றத்திற்காக ஜெயிலுக்கு போக வேண்டும் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். பிறகு வீட்டில் சீதாவும் மீராவும் கோலம் போட்டு கொண்டிருக்க அங்கு வரும் நான்ஸி அதனை தட்டி விட்டு ப்ரியாவையும் பிடித்து திட்டுகிறாள். இதனால் அர்ச்சனா நான்சியிடம் சத்தம் போட நான்ஸி அர்ச்சனாவை மிரட்டுகிறாள்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | இந்தியன் 2 படத்துக்காக வடசென்னையில் பிரமாண்ட ஓவியங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours