Gautham Menon Joshua Imai Pol Kaakha Movie Have More Actions Says Actor Varun | ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா படம் செம விருந்தாக அமையும் நடிகர் வருண்

Estimated read time 1 min read

நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க | Actor Prabhas: லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..

இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது.   அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. 

சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.’ஜோஷ்வா இமை போல் காக்க’ ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் படத்தைத் தயாரித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடித்திருக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருறார்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவு: எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி,
எடிட்டிங்: ஆண்டனி,
இசை: கார்த்திக்,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆடைகள்: உத்தாரா மேனன்,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா,
ஆக்‌ஷன்: யானிக் பென்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே அஸ்வின் குமார்,
கலரிஸ்ட்: ஜி பாலாஜி,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன்,
ஒலிக்கலவை: சுரேன் ஜி.

மேலும் படிக்க | Actor Sivakumar: ‘மீண்டும் மீண்டுமா..’ ரசிகர் கொடுத்த பொன்னாடையை தூக்கியெறிந்த சிவகுமார்..வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours