இந்நிலையில் நேற்று நடிகர் பிரேமிற்கும், நடிகை சுவாசிகாவிற்கும் (Swasika) நேற்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சில ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சின்னத்திரை, வெள்ளித்திரை மலையாள நடிகர்கள் பலர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுவாசிகாவும் நமக்குப் பரிச்சயமானவர்தான். நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான `சாட்டை’ திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்தித்தில் நடித்திருப்பார். தவிர, `அப்புச்சி கிராமம்’ போன்ற சில தமிழ்ப் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். மலையாளத்தில் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours