ஆன்லைன் மோசடிகள் பாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே பல நடிகர், நடிகைகள் ஆன்லைன் மோசடியில் தங்களது பணத்தை பறிகொடுத்து இருக்கின்றனர். புதிதாக வித்யா பாலன் ஆன்லைன் மோசடி பிரமுகர்களிடம் சிக்கி இருக்கிறார். பாலிவுட் நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த நம்பர் மற்றும் வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு தான் தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்கவேண்டாம்”‘ என்று பதிவிட்டுள்ளார்.

வித்யா பாலன் பதிவுக்கு அவரது ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு பாலிவுட் நடிகர் சோனு சூட் போன்று நடித்து மோசடி செய்த நபர் மும்பையில் கைது செய்யப்பட்டார். அதோடு சி.பி.ஐ.அதிகாரிகள் மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளாக நடித்து திடீரென தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.

வித்யாபாலன் மற்றும் பிரதிக் காந்தி இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். அது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. இது தொடர்பாக வித்யாபாலன் மற்றும் பிரதிக் காந்தி ஆகியோர் சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். இப்படம் 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது ஆகும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *