`ரோஜா’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிபு சூர்யன். அந்தத் தொடருக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாரதி கண்ணம்மா சீசன் 2′- வில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அந்தத் தொடரின் மூலம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரீச் கிடைக்கவில்லை. இந்தத் தொடரில் அவருக்கு ஜோடியாக வினுஷா தேவி நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய தொடர் ஒன்றில் இவர் கதாநாயகிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக `பேரன்பு’ தொடரில் நடித்திருந்த வைஷ்ணவி அருள்மொழி நடிக்கிறாராம். `சிவகாமி டெக்ஸ்டைல்ஸ்’ என இந்தத் தொடருக்கு தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கெனவே `ரோஜா’ தொடரில் பிரபலமான பிரியங்கா `நள தமயந்தி’ தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது சிபுவும் கதாநாயகனாக அந்த சேனலிலேயே நடிக்க இருக்கிறார். சிபு – ரோஜா ரசிகர்கள் ஒரே சேனலில் நடிக்கும் இவர்கள் ஒரே தொடரிலும் விரைவிலேயே இணைவார்கள் என கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர் `சூர்ய வம்சம்’. இந்தத் தொடரில் நாயகியாக நடித்திருந்தவர் நிகிதா ராஜேஷ். இவரும் `பேரன்பு’ தொடர் நாயகன் விஜய் வெங்கடேசனும் ஜோடியாக சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர் ஒன்றில் நடிக்கிறார்களாம். இந்தத் தொடரின் பெயர் மல்லி எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

`சூர்ய வம்சம்’ தொடரில் ஏற்கனவே நடித்திருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இந்தத் தொடரின் மூலம் சன் டிவியில் கம்பேக் கொடுக்கின்றார். இந்தத் தொடரில் தான் `அன்பே வா’ சீரியல் ஹீரோயின் டெல்னா டேவிஸ் நடிப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தத் தொடரில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. சரிகம தயாரிப்பில் இரண்டு தொடர்கள் வர இருப்பதாக சொல்கின்றனர். ஒருவேளை மற்றொரு தொடரில் டெல்னா கதாநாயகியாக நடிக்கலாம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவிலேயே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
`மெட்டி ஒலி’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை காவேரி. சில ஆண்டுகள் மீடியாவிலிருந்து விலகி இருந்தவர் தற்போது மீண்டும் நடிப்பதற்கு தயாராகி இருக்கிறார். சமீபத்தில் விகடனுக்காக பிரத்யேகமாக காவேரி அளித்திருந்த பேட்டியில் அது சார்ந்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் காவேரி அவருடன் மெட்டி ஒலி தொடரில் சகோதரிகளாக நடித்திருந்த வனஜாவையும், காயத்ரியையும் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக வனஜா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், `சரோ, தனம், லீலா’ என்கிற கேப்ஷனுடன் மெட்டி ஒலி சிஸ்டர்ஸ் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
+ There are no comments
Add yours