இவர்கள் தலைமையிலான நிர்வாகம் பொறுப்புக்கு வந்த பின் சங்கத்தின் முதல் பொதுக்குழு சில தினங்களுக்கு முன் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் ரவி வர்மா தலைவராக இருந்த முந்தைய நிர்வாகத்தின் போது நடந்ததாகச் சொல்லப்பட்ட நிதி முறைகேடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
விவாதத்தின் தொடர்ச்சியாக தற்போது ரவி வர்மா உள்ளிட்ட சங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள கடிதத்தில் மேற்கண்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 14/1/24 அன்று நடந்த சங்கத்தின் செயற்குழு இவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற, அதற்கு பொதுக்குழு அங்கீகாரம் வழங்கியதாகச் சொல்கின்றனர்.
கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் விபரங்களின் படி,
முன்னாள் தலைவர் நடிகர் ரவி வர்மாவுக்கு (உறுப்பினர் எண் 461) அடுத்து வரும் மூன்று தேர்தல்களில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கம் தொடர்பான அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பது தொடரபான இந்த நடவடிக்கையைப் பொறுத்தவரை காலக்கெடு குறித்து தெளிவாகச் சொல்லப்படவில்லை.
+ There are no comments
Add yours