அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்திருந்தாலும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட திரைப்படமாக இருக்கிறது என்று கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து படம் சமூக வலைதளங்களில் அதிக அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் படத்தின் நாயகன் ரன்பீர் கபூர். இதுகுறித்து பேசிய அவர், “‘அனிமல்’ திரைப்படம் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் பற்றிய ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலையாவது ஏற்படுத்த வேண்டும்.
+ There are no comments
Add yours