Poonam Pandey : 'உயிரோடுதான் இருக்கிறேன்' – வெளியான செய்திக்கு காரணம் இதுதான்!

Estimated read time 1 min read

பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானதாக செய்தி வெளியானது. அவரது ரசிகர்களுக்கு இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவரது மரணம் குறித்து பூனம் பாண்டே குடும்பத்தினர் எதுவும் சொல்லாமல் இருந்தனர். திடீர் திருப்பமாக பூனம் பாண்டே மரணத்தில் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Poonam Pandey

தான் இன்னும் சாகவில்லை என்றும், உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி, பூனம் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “கர்ப்பப்பை புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற ஒரு செய்தி பரவ விடப்பட்டது. கர்ப்பபை புற்று நோய் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்நோயை தடுக்க முடியும். அதனால் இந்த நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பூனம் பாண்டேயின் இந்த வீடியோவை பார்த்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பூனம் பூனம் பாண்டே கடைசியாக நடிகை கங்கனா ரணாவத்தின் ‘லாக் அப்’ டிவி ஷோவில் கலந்து கொண்டார். இதில் அவர் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது திருமண வாழ்க்கையில் நடந்த குடும்ப வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். பூனம் பாண்டேயின் வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாகவே இருந்தது. 2021ம் ஆண்டு சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களில் தனது கணவருடன் கோவாவிற்கு தேனிலவு சென்றார். அங்கு தனது கணவருக்கு எதிராக மானபங்க புகார் கொடுக்க, அவரது கணவரை காவல்துறை கைது செய்தது.

பூனம் பாண்டே – சாம்

பூனம் பாண்டேயை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

2017ம் ஆண்டு பூனம் பாண்டே தனது பெயரில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். இதையடுத்து மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் கூகுள் நிறுவனம் அதற்கு தடை விதித்தது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours