தமிழ் படங்களில் துணை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள சந்தானத்தின் சொத்து மதிப்பு (Santhanam Net Worth) குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காமெடியன் to ஹீராே:

சின்னத்திரையில் கொடி கட்டி பறந்த நடிகர்கள் பலர் அடுத்து, பெரிய திரையை குறிவைத்து நகர்கின்றனர். அப்படி, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்து ‘லொள்ளு சபா’வில் காமெடியனாக வந்து பல லட்சம் பேரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர், சந்தானம். தமிழில் தற்போது முக்கிய நடிகர்களாக இருக்கும் அனைவரின் படங்களிலும் துணை கதாப்பாத்திரங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் நடித்துவிட்டார். 

காமெடியனாக நடித்து கொண்டிருந்த போதே, தன் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில், அதிகமாக சம்பளம் வாங்கும் காமெடியனாகவும் திகழ்ந்தார். திடீரென்று, தான் துணை மற்றும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்க போவதில்லை என்றும் இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும் கூறினார். அதன்படி, தற்போது வரை நாயகனாக மட்டுமே திரையில் தோன்றி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டிக்கிலாேனா உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று, வசூலையும் குவித்தது. 

மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சம்பள விவரம்-சொத்து மதிப்பு..

சந்தானம், லொள்ளு சபா நிகழ்ச்சி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் 2,000 வரை வழங்கப்பட்டதாம். காமெடி மற்றும் கதாப்பதிரங்களில் நடித்து கொண்டிருந்த போது ரூ. 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வாங்கியுள்ளார். இவர் கடைசியாக அரண்மனை படத்தில் நடித்திருந்தார். அதற்காக ரூ.15 லட்சம் சம்பளமாக வாங்கினாராம். ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவுடன் இவரது சம்பளம், லட்சங்களில் இருந்து கோடிகளாக மாறியுள்ளது. சந்தானம் தற்போது ஒரு படத்திற்கு (Santhanam Salary Per Movie) ரூ.5 கோடி முதல் 8 வரை சம்பளமாக வாங்குகிறாராம். 

சந்தானத்தின் சொத்து மதிப்பும், இவரது சம்பளம் போலவே அதிகமாக வளர்ந்துள்ளது. தற்போது உள்ள பணக்கார நடிகர்களுள் இவரும் ஒருவர். சந்தானம் (Santhanam Car) மிகவும் விலை உயர்ந்த கார்-ஆன ரேஞ்ச் ரோவர் எவோக் வகை காரை வைத்துள்ளார். இவருக்கு சென்னையில் சொந்தமாக வீடு உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு மட்டுமே ரூ.13கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சந்தானத்திற்கு தற்போது ரூ.30 கோடிக்கும் மேல் சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்த வருடம் வெளியான சந்தானத்தின் படங்கள்…

வளர்ந்து வரும் ஹீரோக்கள், ஏற்கனவே வளர்ந்த ஹீரோக்கள் ஆகியோரை விட பிசியான நடிகராக வளம் வருகிறார், சந்தானம். காமெடியனாக நடித்து கொண்டிருந்த போதே இவரது படங்கள் வருடத்திற்கு 3-4 ரிலீஸாகும். தற்போது இவர் ஹீரோவாக நடித்து வருவதால், ஒரு படம் ரிலீஸாகி முடிந்தவுடன், இன்னொரு படத்தின் ரிலீஸ் பணிகளில் இறங்கி விடுகிறார். இந்த வருடம் டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் கிக் ஆகிய படங்கள் வெளியாகின. இதில், டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: