மலை அருகே நதி சூழ்ந்த வடக்குப்பட்டியை அதன் எழில் குறையாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக். படத்தின் தன்மை மாறாமல் காமெடியும் கதையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது எடிட்டர் சிவாநந்தீஸ்வவரனின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டு. குட்டி கோயில், பானையை வைத்து உருவாக்கப்பட்ட கடவுள் சிலை எனக் கலை இயக்குநரும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஷான் ரோல்டனின் பின்னணி இசை ப்ளாக் ஹுயூமருக்கு பல இடங்களில் பக்கபலமாக இருக்கிறது.
மக்கள் நம்பிக்கைகளை வைத்து எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என படம் முழுவதும் நய்யாண்டி செய்துவிட்டு, இறுதியில் அந்த நம்பிக்கையையே தூக்கிப்பிடிப்பதாகப் படம் முடிவது சரியா பாஸ். அதே போல கிராமத்தில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் முட்டாள்களாக இருப்பதும், அரசின் வேறெந்த துறையும் அந்த ஊருக்கு வராமலிருப்பதும் செயற்கையான நெருடல். ‘மெட்ராஸ் ஐ’ குறித்த காட்சிகள் முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒரே மாதிரி விஷயங்கள் ரீப்பீட்டில் வருவதால் அவை போகப் போக அலுப்படைய வைக்கின்றன. ‘இதை தவிர்த்திருக்கலாமே பாஸ்’ ரக காமெடிகளும் உண்டு!
ஆங்காங்கே சில காட்சிகள் மிஸ் ஆகாமல் இருந்திருந்தால் காமெடி விருந்து படைக்க வேண்டும் என்ற ‘வடக்குப்பட்டி ராமசாமி’ யின் இலக்கிற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும்.
+ There are no comments
Add yours