35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். ‘Gadar 2’ படத்தை இயக்கிய அனில் ஷர்மா இப்படத்தை இயக்க இருக்கிறார். ‘ஜர்னி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ‘காலா’ பட வில்லன் நானா படேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலிவுட்டில் நடிப்பது குறித்து குஷ்பு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “நான் இந்திப் படங்களில் நடித்து 35 ஆண்டுகளாகிவிட்டன. ‘ப்ரேம் தான்’ என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பு 1989ல் நிறைவடைந்தது.
அதன் பிறகு நான் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. இப்போது நான் முற்றிலும் புதியவளாக உணர்கிறேன். நானா படேகருடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகப்பெரிய நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அப்போது நான் தென்னிந்தியத் திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் என்னால் இந்திப் படங்களில் நடிக்க முடியவில்லை. அழுத்தமான கதாபாத்திரம் கொண்ட ஒரு படத்துடன் இந்தியில் மீண்டும் நடிப்பதை முக்கியமாகக் கருதுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பு.
+ There are no comments
Add yours