Ram Charan Was Honoured By Vels Institute Of Science With A Doctorate At Its Fourteenth Annual Convocation Ceremony | நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் நிறுவனம்

Estimated read time 1 min read

சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க | யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?

பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார். சமூகத்திற்கு பங்களிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர். 

அந்தந்தத் துறைகளில் வல்லுநர்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையே இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல், திரு ராம் சரண் கொனிடேலா, திரைப்பட நடிகர், Dr. GSK வேலு, Trivitron Healthcare இன் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் பத்மஸ்ரீ. ஷரத் கமல் அச்சந்தா, இந்திய தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர், சென்னை. பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, டாக்டர். ஐசரி கே. கணேஷ், விஸ்டாஸ் நிறுவனர்- அதிபர் மற்றும் நடிகர் ராம்சரண் கொனிடேலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். ராம்சரண் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் ராம்சரண் கொனிடேலா இந்த அங்கீகாரத்திற்கு காரணம் தன்னுடன் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் தான் என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பிற்காக இயக்குநர் ஷங்கருக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த டாக்டர் பட்டத்திற்காக தனது குடும்பம் குறிப்பாக, தனது அம்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியதைச் சொன்னார். 

கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ராம்சரண் கொனிடேலாவை தேர்ந்தெடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், அவரின் அபாரமான திறமையை குறிப்பிட்டு, இன்னும் பெரிய மைல்கற்களை சினிமாவில் அவர் அடைவார் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார். வேல்ஸ் க்ரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ்  பல்வேறு களங்களில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாது, புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பது மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் எதிர்கால தலைவர்களை வளர்ப்பது ஆகியவற்றில் உறுதியாக உள்ளது.

மேலும் படிக்க | ‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours