ஒரு நாள் முழுவதும் ஒதுக்கி ரசிகர்களை சந்தித்த மோகன்லால்
21 டிச, 2023 – 14:07 IST
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மாறி மாறி பிஸியான நடிகராக நடித்து வருகிறார். கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் கொண்டவராக முதலிடத்தில் இருக்கிறார். இயக்குனர் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் இன்று டிசம்பர் 21ஆம் தேதி மோகன்லால் நடித்துள்ள நேர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் முழுவதும் தனது ரசிகர்களுக்காக ஒதுக்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் மோகன்லால்.
அனைத்து கேரள மோகன்லால் ரசிகர்கள் மற்றும் கலை நற்பணி குழுவின் 25வது வருட விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் தான் மோகன்லால் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது. கொச்சியில் உள்ள நெடும்பசேரி என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு மோகன்லாலுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய மோகன்லால், ரசிகர்களை தான் தாமதமாக சந்திப்பதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
+ There are no comments
Add yours