கோலிவுட்டை சேர்ந்த பல நடிகர்-நடிகைகள் ஏற்கனவே திருமணமானவர்களை தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வதுண்டு. இந்த வருடமும் கடந்த வருடமும் சில திரை பிரபலங்கள் தங்களுக்கான இரண்டாம் வாழ்க்கை துணையை தேடிக்கொண்டனர். அப்படி, விவாகரத்தானவர்களை திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம் வாங்க. 

ஆதிக் ரவிச்சந்திரன்-ஐஸ்வர்யா பிரபு..

தமிழில், ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கி பிரபலமானவர், ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தையும் இயக்கியவர் இவர்தான். இவருக்கு, நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் கடந்த 15ஆம் தேதி (டிசம்பர்) திருமணம் சென்னையில் நடைப்பெற்றது. இந்த திருமண விழாவில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பிரபு, தன் மகள் ஐஸ்வர்யாவை தனது தங்கை மகன் குணாலுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். ஆனால் இந்த திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில் முடிந்தது. ஐஸ்வர்யா தற்போது சொந்தமாக பேக்கரி பிசினஸில் ஈடுபட்டுள்ளார். 

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா:

நெல்சன் திலீப்குமார் படங்களில் தவறாமல் இடம் பிடிக்கும் ஒருவர், ரெடின் கிங்ஸ்லி. தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகராக உள்ளார். இவர், சீரியல் நடிகை சங்கீதாவை சில வாரங்களுக்கு முன்பு கரம் பிடித்தார். இவர்களின் திருமணம், மைசூரில் சிம்பிளாக நடைப்பெற்றது. 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லிக்கு சங்கீதாவுடன் நடைப்பெற்றது முதல் திருமணமாகும். ஆனால் சங்கீதாவிர்கு ஏற்கனவே 2009ஆம் ஆண்டில் கிரிஷ் என்பவருடன் திருமணமாகி உள்ளது. சங்கீதாவிற்கு ஷிவ்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது. 

ஜான் கொக்கேன்-பூஜா:

தமிழ் சினிமாவில் தற்போது பலருக்கும் தெரிந்த வில்லன் நடிகராக வலம் வருபவர், ஜான் கொக்கேன். இவர், ஏற்கனவே நடிகை மீராவை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு விவாகரத்தானது. இதையடுத்து, துணை நடிகையாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் தோன்றும் நடிகை பூஜாவை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பூஜாவும் ஏற்கனவே க்ரெக் என்பவரை திருமணம் செய்து 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பூஜா-ஜான் கொக்கேன் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 

Cinema Celebrities

மேலும் படிக்க | அசோக் செல்வன் to ரெடின் கிங்ஸ்லி-2023ல் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் தம்பதிகள்!

டி இமான்-எமிலி:

இசையமைப்பாளர் டி.இமான், தனது மனைவி மோனிகாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக கடந்த 2020ஆம் ஆண்டு அறிவித்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 13ஆண்டு திருமண வாழ்வை முடித்துக்கொண்ட இமானை பலர் விமர்சித்தனர். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டி.இமான் எமிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். எமிலிக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளார். 

ஹன்சிகா-சோஹைல் கத்தூரியா:

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த வட இந்திய நாயகிகளுள் ஒருவர், ஹன்சிகா மோத்வானி. இவர், தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கத்தூரியாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம் பிடித்தார். சோஹைல், ஹன்சிகாவின் தொழிலில் பார்ட்னர் என்றும் கூறப்படுகிறது. சோஹைலிற்கு ஏற்கனவே ரிங்கி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் அதன் பிறகு விவாகரத்தும் பெற்றுள்ளனர். ரிங்கி, ஹன்சிகாவின் தோழி என்றும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | வசமாக சிக்கிய தாரா-சாட்சியாக மாறிய சூர்யாவின் நண்பன்..மாரி சீரியலில் பெரிய ட்விஸ்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *