பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்தவகையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நடைபெற்று வருகிறது. அதேபோல தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். அந்நிகழ்ச்சியின் பைனல்ஸ் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தெலுங்கு பிக் பாஸைப் பொறுத்தவரை பல்லவி பிரசாந்த், அமர்தீப் என இரண்டு போட்டியாளர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி நிலவியது. இதில் பல்லவி பிரசாந்த் போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.
அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது அமர்தீப் மற்றும் பல்லவி பிரசாந்த் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. போட்டி முடிந்த பிறகு அமர்தீப் அவரின் குடும்பத்துடன் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் அவரது காரை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இந்த சீசனில் போட்டியாளர்களாக இருந்த அஸ்வினி, கீது ராயல் ஆகியோரது கார்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி அவ்வழியே வந்த அரசு பேருந்துகளையும் உடைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பல்லவி பிரசாந்திற்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களான அஸ்வினி மற்றும் கீது, ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.
பிரச்னைக்கு காரணமான பிரசாந்தின் சகோதரர் மனோகர் மற்றும் பிரசாந்தின் நண்பர் வினய் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக போலீஸ் அறிவித்து அவர்களை தேடி வந்தனர்.
தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பல்லவி பிரசாந்த் தலைமறைவாகி இருந்து நிலையில் தற்போது ஹைதராபாத்தில் போலீசாரால் பல்லவி பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பல்லவி பிரசாந்தைப் பொறுத்தவரைக்கும் அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கிறார். விவசாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். யூடியூப் மூலம் பிரபலமானதால் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours