சந்தீப் ரெட்டி இயக்கத்தில், ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படத்தில் அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தாலும் , சிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ரஞ்சித் ரஞ்சனும் அனிமல் படம் குறித்து விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “ வன்முறை, அவமானம் , அக்கிரமங்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தும் விதத்தில் இப்படம் அமைந்திருக்கிறது.
இதுபோன்ற படங்கள் சமூகத்தில் வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும். இப்படியான படங்களுக்கு திரைப்படத் தணிக்கைக் குழு எப்படி அனுமதி அளித்தது.
இதுபோன்ற படங்கள் சமூகத்திற்கு ஒரு நோய்” என்று விமர்சித்திருக்கிறார். மேலும் அனிமல் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற தன் மகளும் அவளது நண்பர்களும் அழுதுகொண்டே பாதி படத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியதாகவும் கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours