`அன்னபூரணி தொடங்கி அனிமல் வரை!' – கடைசி மாதத்தின் முதல் வாரத்தில் குவியும் படங்கள்!

Estimated read time 1 min read

2023-ம் ஆண்டு முடிவடைவதால், இந்தாண்டு தணிக்கை செய்யப்பட்ட படங்களை டிசம்பருக்குள் வெளியிட்டு விட வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் நினைப்பதுண்டு.

அந்த வகையில் இந்த டிசம்பர் முதல் வாரத்தில் சின்ன பட்ஜெட் , பெரிய பட்ஜெட் எனப் பாகுபாடு இல்லாமல் படங்கள் களைகட்டும் வாரமாக அமைந்திருக்கிறது. வரும் டிசம்பர் 1ம் தேதி, தமிழில் வெளியாகும் படங்களைப் பார்ப்போம்.

‘பார்க்கிங்’

பார்க்கிங்:

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள படம், ‘பார்க்கிங்’. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். மாறுபட்ட கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷனுக்காக பிக்பாஸ் வீடு வரை சென்றுவிட்டார் ஹரிஷ். இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம்.

அன்னபூரணி படத்தில் நயன்தாரா

அன்னபூரணி:

நயன்தாவின் 75வது படம் ‘அன்னபூரணி The Goddess of Food’. இயக்குநர் ஷங்கரின் சீடரான நிலேஷ் கிருஷ்ணா, இயக்குநராக அறிமுகமாகும் படமிது. சத்யராஜ், ஜெய் உள்பட பலர் நடித்துள்ளனர். அக்ரஹாரத்து பெண், அசைவம் சமைக்கும் சமையல் சூப்பர் ஸ்டார் ஆவதுதான் படத்தின் கதை. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புரொமோஷன்களில் பங்கேற்ற நயன்தாரா, இது அவரது 75வது படம் என்பதால் இதற்கும் புரொமோஷனில் பங்கேற்பார் என கோடம்பாக்கம் எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.

அனிமல்:

பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த படம் ‘அனிமல்’. அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ‘கங்குவா’ படத்தின் வில்லனாக நடித்து வரும் பாபி தியோல், இதிலும் வில்லன். ‘விடாமுயற்சி’ சுப்ரீம் சுந்தர், இதிலும் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார். ‘பேட்ட’ கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜன், இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளாக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஹைதராபாத், சென்னை என இரண்டு இடங்களுக்கும் மொத்த படக்குழுவுமே புரொமோஷனில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வா வரலாம் வா:

‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாஸ் ஹீரோவாகவாக நடித்திருக்கும் படம் ‘வா வரலாம் வா’. நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரெமா, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம் எனப் பலருடன், 40 குழந்தைகளும் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர், தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

‘வா வரலாம் வா’

சூரகன்:

வி. கார்த்திகேயன் ஹீரோவாகவும், சுபிக்‌ஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் படம் ‘சூரகன்’.

‘சூரகன்’ டீம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்னைகள் என்ன என்பது தான் ‘சூரகன்’ படத்தின் கதை. சதீஷ் கீதா குமார் இயக்கியிருக்கிறார்.

நாடு:

ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன் இயக்கியிருக்கும் படம் ‘நாடு’. ‘பிக்பாஸ்’ தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம்புலி, ஆர்.எஸ்.சிவாஜி எனப் பலர் நடித்துள்ளனர்.

தர்ஷன்

மலைவாழ் மக்களின் வலியையும், வாழ்வியலையும் நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்கள். கொல்லிமலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours