Varlaxmi Sarathkumar Starring Psychological Thriller Sabari Worldwide Movie Releasing On May 3 | நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம் மே 3ம் தேதி வெளியீடு

Estimated read time 1 min read

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த ‘சபரி’ திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் மோகன்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவர் அசத்தியுள்ளார். மஹா மூவீஸுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா ‘சபரி’ படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே கையாண்டுள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார். 

தொழில்நுட்ப குழு:

கூடுதல் திரைக்கதை: சன்னி நாகபாபு, பாடல்கள்: ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர், ஒப்பனை: சித்தூர் ஸ்ரீனு, ஆடைகள்: ஐயப்பா, 
ஆடை வடிவமைப்பாளர்: மானசா, 
ஸ்டில்ஸ்: ஈஷ்வர்,
டிஜிட்டல் PR: விஷ்ணு தேஜா புட்டா, 
மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயனா,
தமிழில் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா,
தயாரிப்பு நிர்வாகி: லக்ஷ்மிபதி கண்டிபுடி, இணை இயக்குநர்: வம்சி, சண்டைகள்: நந்து – நூர், VFX: ராஜேஷ் பாலா, 
நடன இயக்குநர்கள்: சுசித்ரா சந்திரபோஸ் – ராஜ் கிருஷ்ணா, 
கலை இயக்குநர்: ஆஷிஷ் தேஜா பூலாலா, 
எடிட்டர்: தர்மேந்திர ககரலா, 
புகைப்பட இயக்குநர்: ராகுல் ஸ்ரீவத்சவா, நிர்வாக தயாரிப்பாளர்: சீதாராமராஜு மல்லேலா, இசை: கோபி சுந்தர், வழங்குபவர்: மகரிஷி கொண்ட்லா, 
தயாரிப்பு: மகேந்திர நாத் கொண்ட்லா,
கதை-திரைக்கதை- வசனம்- இயக்கம்: அனில் கட்ஸ்.

மேலும் படிக்க | ஷங்கர் மகள் திருமணத்தில் குத்து டான்ஸ் ஆடிய அட்லீ-ரன்வீர் சிங்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours