வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடி யார்?
18 நவ, 2023 – 12:18 IST
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019 ஆண்டு வெளிவந்த ‛வார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரமஸ்தரா இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார்.
இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில் முதற்கட்டமாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து தற்போது ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக மற்றொரு கதாநாயகியாக நடிக்க சர்வாரி வாக் என்கிற நடிகை ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours