இப்படத்தில் விஜய், திரிஷாவுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன்,மிஷ்கின், மடோனா செபாஸ்டின், பிரியா ஆனந்த் மற்றும் மன்சூர் அலிகான் என்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் லியோ படத்தில் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. திரிஷாவுடன் தான் இணைந்து நடிக்க காட்சிகள் கிடைக்காதது குறித்து ஆட்சேபகரமான கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டித்து த்ரிஷா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்து அதிகமாக மக்கள் கவனத்தை ஈர்த்து, மன்சூர் அலிகான் பேசியதற்கு அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.