’நான், உங்களை லீசுக்கு விடல. எஸ்.டி.எஸ்.கே நிறுவனத்துக்கு வீட்டை வாடகைக்குத்தான் விட்டேன். லீசுக்கு விடுறதா எந்த அக்ரிமென்ட்டும் நான் போடல. எனக்கு, அந்த நிறுவனம் வாடகைதான் அனுப்பிக்கிட்டிருந்தது. இப்போ, அந்த நிறுவனம் தலைமறைவாகிடுச்சு. அதனால, நீங்க தயவுசெஞ்சு வீட்டை காலி பண்ணிடுங்க’ன்னு சொன்னேன். அவங்களும் ரெண்டு மாசம் டைம் கொடுங்க. காலி பண்ணிடுறோம்னு ரொம்ப பாவமாத்தான் சொன்னாங்க. ஆனா, ரெண்டு மாசத்துக்கு மேலாகியும் காலி பண்ணாததால ஏன் காலி பண்ணலைன்னு போயி திரும்பக் கேட்டேன். அதுக்கு அவங்க, ‘கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கோம். தீர்ப்பு வந்தபிறகுதான் காலி பண்ணுவோம்’னு சொல்லிட்டாங்க.
ஒருகட்டத்துல, ‘நீங்க சினிமா நடிகர். நாங்க மீடியாவுக்கு போவோம்’னு என்னையே மிரட்டுனாங்க. பொதுவா, இந்த சமூகத்துல நடிகர்னாலே தப்பே செய்யலைன்னாலும் அவரைத் தவறா பார்க்குற கண்ணோட்டமும் வசதிங்குறதால இவங்கதான் தப்பு பண்ணியிருக்காங்கங்குற எண்ணமும் ஈஸியா வந்துடுது. இதனால, உடனடியா போயி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். போலீஸும் அஞ்சு ஆறு தடவை பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, என் வீட்டுல குடியிருக்கிறவங்க வரவே இல்லை. ஒன்னரை வருஷமா இழுத்துட்டே இருக்காரு.
ஒவ்வொரு முறையும் அவங்கக்கிட்ட பேசுறதுக்காக போவோம். ஆனா, வீட்டை பூட்டிட்டு எங்க போவாங்கன்னே தெரியாது. ஒவ்வொரு முறையும் என்னோட வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைஞ்சே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன். எவ்ளோ மன வருத்தமா இருக்கும் யோசிச்சு பாருங்க.
+ There are no comments
Add yours