மேலும் வைல்டு கார்டு என்ட்ரி வழியாக நான்கு வாரங்கள் கழித்து ஒரே நேரத்தில் ஐந்து பேர் உள்ளே சென்றதும், அவர்களை ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டிலிருந்தவர்கள் ராகிங் செய்யாத குறையாக நடத்திய விதமும் நிகழ்ச்சிக்குக் கூடுதல் கன்டென்ட் தந்தன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வெளியில் பேட்டி கொடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தினேஷ் அவரது மனைவி ரச்சிதா இருவருக்குமே நெருக்கமான நடிகை பிரேமி வெங்கட்டும் பிக் பாஸ் குறித்து விகடனுக்குப் பேசினார்.
“‘ஜீ தமிழ் சீரியல்ல ஒளிபரப்பான ‘நாச்சியார் புரம்’ சீரியலுக்காக தினேஷ் எங்கிட்டப் பேசியதிலிருந்து எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருது. அந்தத் தொடரில் நான் நடிக்கணும்னு ரெண்டு மாசம் எனக்காகக் காத்திருந்தார் தினேஷ். ரச்சிதாவும் நானுமே இன்னைக்கும் நல்ல நட்போடுதான் இருக்கோம்.
கடந்தாண்டு ரச்சிதா பிக் பாஸ் போயிருந்தப்பவும் அவங்க விளையாடிய விதத்தைப் புகழ்ந்து விகடனில் நான் பேசியிருந்தேன்.
+ There are no comments
Add yours