தி ரெயில்வே மேன்: மாதவன் நடித்த வெப் தொடர் 18ம் தேதி வெளிவருகிறது

16 நவ, 2023 – 11:45 IST

எழுத்தின் அளவு:


The-Railway-Man:-Madhavan-starrer-web-series-releasing-on-18th

1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் உடல் பாதிப்பு அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில்வே ஊழியர்கள் சிலர் சாதுர்யமாக செயல்பட்டதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர். உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட அந்த ரயில்வே ஊழியர்களை பற்றி உருவாகி உள்ள தொடர் ‘தி ரெயில்வே மேன்’.

இந்த தொடரில் மாதவன், கே.கே.மேனன் திவ்யேந்து சர்மா, பபில்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவ் ராவில் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. தற்போது நாளை மறுநாள் (18ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: