மிக்சர் போட்டியாளர் என ஒவ்வொரு வாரம் ஒவ்வொருவரைப் பற்றி சமூகவலைதள பக்கங்களில் வினுஷா, அக்ஷயா, பிராவோ குறித்து விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் சரவண விக்ரம் இணைந்திருக்கிறார். ஆரம்பம் முதலே பெரிய அளவில் அவர் யார் என மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கேப்டனாக அவர் இருந்த வாரம் கூட அவராக எந்த முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை என அவர் தொடர்பாக பல விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் யுனிவர்ஸ் மீது நம்பிக்கை உள்ள சரவண விக்ரம், `பிக்பாஸ் போட்டியாளர் சரவண விக்ரம்’ என அறிவிப்பதாகக் கூறிக் கொண்டார்.
பிக்பாஸே வான்டடாகக் சரவணனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல நிக்காம பேசிட்டே, வம்பு செய்துட்டே இருப்ப… இப்ப ஏன்பா அமைதியா இருக்க… அதெல்லாம் நடிப்பா கோபி?’ என `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் ஆர்மி கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் சீசனில் எப்படி ரித்திகா அமைதியாக இருந்து டைட்டில் வின் பண்ணினாரோ அதே மாதிரி இந்த சீசனில் நிச்சயம் கப்பு எங்க சரவண விக்ரமிற்குத்தான் என இன்னொரு புறம் அவரது ரசிகர்கள் கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். அதையே நெகட்டிவ் ஆகவும் சிலர் ட்ரோல் செய்கிறார்கள். எது எப்படியோ `சைலன்ட் ஆக இருந்து கப்பை வாங்கிட்டு போயிடலாம்’ என அவர்கள் நினைப்பது கூட ஒருவகை யுக்தியாக இருக்கலாம். இனியாவது அவரும் அவருடைய கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவாரா? லவ் கன்டென்ட் கொடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
சரவண விக்ரம் குறித்த உங்களுடைய கருத்துகளை மறக்காம கமென்ட் பண்ணுங்க!
+ There are no comments
Add yours