Japan Movie OTT Release When And Where To Watch Karthi Raju Murugan

Estimated read time 1 min read

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம், ஜப்பான். கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படத்தின் ஓடிடி வெளியீடு (Japan OTT Release) குறித்த தகவல் தற்பாேது வெளியாகியுள்ளது. 

ஜப்பான் திரைப்படம்:

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவானது, ஜப்பான். ஜோக்கர், ஜிப்ஸி, குக்கூ போன்ற படங்களை இயக்கி மக்களை கவர்ந்த இயக்குநரான ராஜூ முருகன், இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, பிரம்மாண்டமான முறையில் நடந்தது. கார்த்தியின் 25வது படம் என்பதாலும், நல்ல இயக்குநரின் படம் என்பதாலும் இப்படம் மீது பலருக்கு பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தது. 

ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். கதை சொல்லியான பவா செல்லதுரை, வைகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர். 

ஓடிடி ரிலீஸ்:

தற்போது, எந்த படம் திரையரங்குகளில் வெளியானாலும், அது ஓடிடியிலும் வெளியிடப்படுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில், ஜப்பான் படம் வெளியாகி 4 நாட்களே ஆகியுள்ள நிலையில் அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களுள் ஒன்றாக விளங்கும், நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியுள்ளதாம். வழக்கமாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியானதற்கு 50-60 நாட்களுக்கு பிறகு ஓடிடி வெளியீடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பத்தில் அல்லது இந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘லியோ’ படத்திற்கு பிறகு சம்பளத்தை சரமாரியாக உயர்த்திய த்ரிஷா! எத்தனை கோடி தெரியுமா?

ஜப்பான் படத்திற்கான விமர்சனம்..

ஜப்பான் படத்திறக்கு வெளியான முதல்நாளே ரசிகர்கள் மத்தியில் இருந்து நெகடிவான விமர்சனங்கள் எழுந்தன. சில ஆண்டுகளாக தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வந்த கார்த்தி, கடந்த சில வருடங்களாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்தார். ஆனால், தற்போது மறுபடியும் இது போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து விட்டாரே என்ற ஏமாற்றம் தங்களுக்கு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி, ஜப்பான் படத்தில் இடம் பெற்றுள்ள காமெடிகள், காட்சிகள் அனைத்தும் பெரிதாக ஈர்க்கும் வகையில் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

‘இந்த’ கொள்ளையனின் கதைதான்..

ஜப்பான் படத்தில் கார்த்தி கில்லாடி கொள்ளையனாக நடித்துள்ளார். தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல நகைக்கடையில் பெரும் கொள்ளை நடந்தது. இதற்கு முக்கிய மூலையாக செயல்பட்டவர், எஸ்.முருகன். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் ஜப்பான் படத்தின் கதை எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மூன்று மெகா நடிகர்களின் படங்களில் நடித்த பிக்பாஸ் மாயா! எந்தெந்த படங்கள் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours