நாம சீரியல் பண்ணும்போது என்ன கேரக்டர் பண்றோமோ அதுதான் மக்கள் மனசுல பதியும். நெகட்டிவ் பண்ணினா என்னைப் பார்க்கும்போது அவங்களுக்கு கோபம் தான் வரும், பாசிட்டிவ் கேரக்டர் பண்ணினா அன்பு வரும். இதே கேரக்டர் தொடர்ந்து வரும்போது யாராவது என்னைப் பார்க்கும்போது வார்த்தையாகவோ, மதிப்பில்லாமலோ பேசிடுவாங்களோன்னு ஒரு கஷ்டம் இருந்துச்சு. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன பர்சன். அதனால இந்தக் கேரக்டர் இனி பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப் படத்துலேயும் இந்தக் கேரக்டர்னு சொல்லவும் என் சீன்ஸ் எப்படி இருக்கும்னு கேட்டேன். நீங்க அந்த ரூம்ல இருந்தீங்கங்கிற மாதிரி தான் காட்டுவோம்னு சொன்னாங்க. அதுமட்டுமில்லாம எனக்கு ஒரு குழந்தை இருக்கும், அந்தக் குழந்தையை வச்சு மிரட்டுவாங்கன்னு சொல்லவும் என் குழந்தைக்காக கதறி அழும்போது இந்தக் கேரக்டர் மொத்தமா உடைஞ்சிடும்னு தோணுச்சு. அதனால தான் இந்தக் கேரக்டருக்கு ஓகே சொன்னேன்!” என்றவர் தொடர்ந்து பேசினார்.

யமுனா சின்னதுரை

யமுனா சின்னதுரை

“பெரிய ஆக்டருடன் நடிக்கும்போது அவங்க நமக்கான ஸ்பேஸ் கொடுப்பாங்களா என்கிற பயம் எனக்கு எப்பவும் உண்டு. சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினேன். நீங்க படத்துல காஞ்சனா பண்ணீங்க நான் சீரியலில் பேயாக நடிச்சேன்னு சொல்லவும், `இப்பதான் ஞாபகம் வருது, யாரடி நீ மோகினி சீரியலில் நீங்க தானே பேயாக பண்ணியிருந்தீங்க… கேள்விபட்டிருக்கேன்!’னு சொன்னார். அதோடு, `நீங்க பார்க்கிறதுக்கு சீதா மேம் மாதிரி இருக்கீங்க. உங்க கண்ணு, மூக்கெல்லாம் ஷார்ப் ஆக இருக்கு. உங்க பெர்ஃபார்மன்ஸை கண்ணுல கொடுத்தீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும். இது சூப்பர் சீன்… உங்களால எவ்ளோ முடியுமோ அதை பண்ணுங்க… என்னைப் பற்றி யோசிக்காதீங்க!’னு சொன்னார். 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *