புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அது இங்கிலாந்தை சேர்ந்த இந்திய பெண் ஒருவரின் வீடியோ என்பதும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தின் மூலம் அதை மாற்றி இவ்வாறு செய்யப்பட்டதும் பின்பு தெரியவந்தது. இதற்கு நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours